ஓய்வூதியம்
புதிய சிவில் ஓய்வூதியம் வழங்கும் போது,
- முதல் ஓய்வூதியம், ஓய்வூதிய திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படுவதோடு அதனைபெற்றுக்கொண்டவுடன் உங்களுடைய ஓய்வூதிய கோப்பு எங்களுடைய பிரதேச செயலகத்திற்கு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
- ஓய்வூதியம் தொடர்பான தகவல் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது என்றால் அதனை பெற்றுக்கொண்டதாகவும் கோப்புக்குதேவையான தகவல்களைபெற்றுத் தருமாறும் ஓய்வூதியருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படும், இத்தகவல்களை வெகு விரைவில் பிரதேச செயலகத்தின் ஓய்வூதிய பிரிவிற்கு வழங்கவும்.
தேவையான தகவல்கள்
- வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதலழ்.
- தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி.
- வங்கி கணக்கின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி.
- பிறப்புச் சான்றிதழ்.
- சுயவிபரக் கோவை (பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும்.
- உங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு 03 மாதங்கள் கடந்த பின்பும் ஓய்வூதியம் தொடர்பான தகவல் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படாவிடின் உங்களுடைய ஓய்வூதியம் இடை நிறுத்தப்படும்.எனவே ஓய்வூதியத்தைபெற்றுக்கொண்ட உடனே உங்களுடைய ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை எங்கள் காரியாலயத்திற் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
- உங்களுடைய தகவல்கள் வெகு விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
விதவைகளுக்கான ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் போது,
- சிவில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர் மரணித்தவுடன் பிரதேச செயலகத்தின் ஓய்வூதிய பிரிவிற்கும் உரிய பிரதேசத்தின் கிராம உத்தியோகத்திரடமும் அறிவித்தல் வேண்டும்.
- அதன் பிறகு விதவைகள் ஓய்வூதியகொடுப்பணவுகளை தயாரிப்பதற்காக பின்வரும் தகவல்களை பிரதேச செயலகத்தின் ஓய்வூதிய பிரிவிற்கு வழங்கப்படல் வேண்டும்.
- விதவையின் வேண்டுதல் கடிதம்.
- மரண சான்றிதழின் மூலப்பிரதி.
- திருமண சான்றிதழின் மூலப்பிரதி.
- 26 வயதிற்க்கு குறைவான குழந்தை இருப்பின் பிறப்புச்சான்றிதழ்.
- விதவையின் அனாதை குழந்தையின் இல.(82/83).
- விதவையின் தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி.
- விதவையின் வங்கி கணக்கின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி.
- கடவுச் சீட்டு அளவிலான வர்ண புகைப்படம்.
- வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதலழ்.
- பெயரில் மாற்றம் ஏதும் இருப்பின் அதுதொடாபான சத்தியக் கடதாசி.
- சுயவிபரக் கோவை.
அனாதை குழந்தைகளுக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் போது,
ஓய்வூதியர் மரணித்த பின் 26 வயதுக்கு குறைவான வேலையற்ற குழந்தைகளுக்காக வழங்கப்படுவதாகும்.அதற்காக பின்வரும் தகவல்களை பிரதேச செயலகத்திற்கு வழங்கல் வேண்டும்.
- அனாதை குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி.
- அனாதை குழந்தையின் வங்கி கணக்கின் கிராம உத்தியோகத்தரினால்
- உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி.
- அனாதை குழந்தையின் அடையாள அட்டையின் கிராம உத்தியோகத்தரினால்
- உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி
- தாய் மற்றும் தந்தையின் மரண சான்றிதழின் மூலப்பிரதி.
- தாய் மற்றும் தந்தையின் திருமண சான்றிதழின் மூலப்பிரதி.
- 18 வயதிற்கு குறைவாயின் பாதுகாவலருடனும், 25 வயதிற்கு அதிகமாயின்
- 5/1,6.7.8 விண்ணப்பங்கள் முன்வைக்கப்படல் வேண்டும்.
ஊணமுற்றோருக்கான ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் போது,
ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டிருக்கின்ற ஓய்வூதியர் மரணித்த பின்பு, அவ்வோய்வூதியத்தை நிறுத்துவதற்காக பிரதேச செயலகத்தின் ஓய்வூதிய பிரிவிற்கும் குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தருக்கும் அறிவித்தல் வேண்டும். அதன் பின் ஊணமுற்றோருக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் தகவல்களை பிரதேச செயலகத்திற்கு வழங்கல் வேண்டும்.
- ஊணமுற்றவரினால் வேண்டப்ப்படும் வேண்டுதல் கடிதம்.
- நிரந்தர ஊணமுற்ற அனாதை குழந்தைக்காக வேண்டப்படும் ஊணமுற்றோர் ஓய்வூதிய விண்ணப்ப படிவம் ( ஊண 01 02)
- சத்திய கடிதம் மற்றும் PD4 விண்ணப்ப படிவம்
- ஊணமுற்ற அனாதை குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி.
- மரணித்த ஓய்வூதியரின் மரண சான்றிதழின் மூலப்பிரதி.
- வைத்திய சான்றிதழின் நிழற் பிரதி.
- ஊணமுற்றவரின் முழுமையான வர்ண புகைப்படம்.
- ஊணமுற்றவரின் கடவுச் சீட்டு அளவிலான கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட வர்ண புகைப்படம்.
- ஊணமுற்றவரின் தேசிய அடையாள அட்டையின் கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி
- ஊணமுற்றவரின் வங்கி கணக்கின் கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி.
- தேவையாயின் பாதுகாவலர்,
- பாதுகாவலரின் கடவுச் சீட்டு அளவிலான கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட வர்ண புகைப்படம்.
- பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கின் கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதி.
மேற்குறித்த ஆவணங்கள் பிரதேச செயலகத்தின் ஓய்வூதிய பிரிவிற்கு வழங்கப்பட்டதன் பின்பு ஊணமுற்றவரை பரிசோதிப்பதற்கான நாள் ஒதுக்கப்படும். குறித்த அந்நாளில் பரிசோதனைக்காக வருகை தரல் வேண்டும்.
ஓய்வூதியம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் போது,
- சிவில் மற்றம் இராணுவ புதிய ஓய்வூதிய அடையாள அட்டையை ஓய்வூதிய திணைக்களத்தினால் தயாரிக்கப்படும்.
சீரற்ற அடையாள அட்டைக்கான புதிய அடையாள அட்டையை வெளியிடுதல்.
- சீரற்ற அடையாள அட்டை.
- 3 ¼ * 2 ½ அளவிலான நிழற் பிரதி 2 கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்படுத்திக் கொள்ளல்.
- வேண்டுதல் கடிதம்.
தொலைந்த அடையாள அட்டைக்காக,
- அடையாள அட்டை தொலைந்து தொடர்பாக காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறையீட்டின் நிழற் பிரதி.
- வேண்டுதல் கடிதம்.
- 3 ¼ * 2 ½ அளவிலான நிழற் பிரதி 2 கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்படுத்திக் கொள்ளல்
















