தேசிய அடையாள அட்டை வழங்கல்
தேசிய அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரருக்கு இருக்க வேண்டிய தகைமைகள்
- இலங்கை பிரஜையாக இருத்தல்.
- 15 வயது பூர்த்தியடைதல் வேண்டும்.
பொதுச் சேவைக்காக
முதல் முறையாக தேசிய அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொள்ளும் போது தேவையான ஆவணங்கள்
- பிறப்புச் சான்றிதழ்.( உறுதி செய்யப்பட்ட நிழற் பிரதி)
- புகைப்படம் உள்ளடங்கிய பிரதி.( ஸ்டூடயோவில் பெறலாம்.)
- 100 ரூபாய் செலுத்திய 172 பற்றுச்சீட்டை விண்ணப்பப் பத்திரத்தின் 5 ஆவது பக்கத்தில் மேல் மூலையில் ஒட்டப்படல் வேண்டும்.
- 45 ரூபாய் பெருமதியான முத்திரையுடன் முகவரி எழுதப்படாத 9” * 4” கடித உறை.
- 16 வயதுக்கு மேற்பட்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவராயின்
முதன் முதலில் விண்ணப்பிபதற்கு தேவையான ஆவணங்களுக்கு மேலதிகமா ஆ.ப.தி මෙ/02/03 வடிவத்திற்கு ஏற்ப 250 ரூபாய் தண்டப்பணம் செலுத்திய பற்றுச்சீட்டு மற்றும் அந்த வடிவப் பத்திரத்தையும் சமர்பித்தல் வேண்டும். (வடிவப் பத்திரம் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொண்டு பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு 250 ரூபாய் செலுத்துதல் வேண்டும்.
தேசிய அடையாள அட்டையில் திருத்தங்கள் ஏற்பட வேண்டுமாயின் அதற்கு தேவையான ஆவணங்கள்.
- பிறப்புச் சான்றிதழ்.( உறுதி செய்யப்பட்ட நிழற் பிரதி)
- புகைப்படம் உள்ளடங்கிய பிரதி.( ஸ்டூடயோவில் பெறலாம்.)
- இறுதியாக பெற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அடையாள அட்டை.
இவ்வடையாள அட்டையின் இலக்கம் தெளிவில்லை என்றால் இலக்கம் குறிப்பிடப்பட்ட எழுத்து மூலமான ஆதாரம் ஒன்று கிராம உத்தியோகத்தரினால் உறுதி செய்து சமர்பித்தல் வேண்டும்.
- 100 ரூபாய் செலுத்திய 172 பற்றுச்சீட்டை விண்ணப்பப் பத்திரத்தின் 5 ஆவது பக்கத்தில் மேல் மூலையில் ஒட்டப்படல் வேண்டும்.
- 45 ரூபாய் பெருமதியான முத்திரையுடன் முகவரி எழுதப்படாத 9” * 4” கடித உறை.
தொலைந்த தேசிய அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆவணங்கள்
- பிறப்புச் சான்றிதழ்.( உறுதி செய்யப்பட்ட நிழற் பிரதி)
- புகைப்படம் உள்ளடங்கிய பிரதி.( ஸ்டூடயோவில் பெறலாம்.)
- பொலிஸ் முறையீட்டின் மூலப்பிரதி.
- 500 ரூபாய் செலுத்திய 172 பற்றுச்சீட்டை விண்ணப்பப் பத்திரத்தின் 5 ஆவது பக்கத்தில் மேல் மூலையில் ஒட்டப்படல் வேண்டும்.
- இதற்கு முன் தேசிய அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொண்டதற்கான அறிக்கை. (கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்)
- தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதி செய்வதற்கு உறுதிபடுத்தப்பட்ட எழுத்து மூலமான ஆதாரம்.
- 45 ரூபாய் பெருமதியான முத்திரையுடன் முகவரி எழுதப்படாத 9” * 4” கடித உறை.
மதகுருமாருக்காக
குறித்த ஆவணங்களுக்கு மேலதிகமாக,
- சாமனேர / உபசம்பதா சான்றிதழ்.
- துறவரத்தை களைந்தவராயின் துறவரத்தை களைந்த சான்றிதழ்.
- மதகுருமார்கள் / தசசில் தாய்மார்கள்பௌத்த சாசன திணைக்களத்தில் பதிவு செய்த சான்றிதழ்.
இரட்டை குடியுரிமையுடைய நபர்களுக்காக
- இரட்டை குடியுரிமை சான்றிதழின் உறுதி செய்யப்பட்ட நிழற் பிரதி.
- கடவுச் சீட்டின் தரவு பக்கத்தின் உறுதி செய்யப்பட்ட நிழற் பிரதி.
- இந்நாட்டிற்கு சமூகமளித்த தினத்தை உறுதிபடுத்த குடிவரவு குடியகல்வு அதிகாரியிடம் இருக்கும் சமூக ஏற்பிசைவு குறிக்கப்பட்ட விசா பக்கத்தின் உறுதி செய்யப்பட்ட நிழற் பிரதி.
(ஒருநாள் சேவைக்காக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதிகள் அவசியமாகும்)
- வெளிநாட்டு குடியுரிமையை பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட நாட்டின் மூலம் விநியோகிக்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழின் நிழற்பிரதி.
- இரட்டை குடியுரிமையாளரக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்ட தினத்திலிருந்து 6 மாத காலங்கள் மீறிய போது தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பொது,
- ஆ.ப.தி මෙ/02 /03 வடிவத்திற்கு ஏற்ப தண்டப்பணம் அறவிடப்பட்ட பற்றிச்சீட்டு மற்றும் வடிவப்பத்திரத்தை சமர்பித்தல் வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் அல்லது யூகிக்க முடியுமான வயதுச் சான்றிதழ் இல்லாத 40 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக.....
- I. தரவுகளற்ற ஆவணங்கள் ( பதிவுப் புத்தக தேடுதல் விளைவு ) மற்றும் பின்வரும் ஆவணம் அல்லது ஆவணங்கள்.)
- குழந்தைகள் இருப்பின் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்.
- பாடசாலை விடுப்புச் சான்றிதழ் .
- திருமணச் சான்றிதழ்.
- பிறக்கும் போது பாரம்பரிய ரீதியாக தயாரிக்கப்பட்ட ஜாதகம் / கேந்திரம் / நேரம் பார்த்தல் பிரதேச செயலாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மூலம் உறுதிசெய்யப்பட்ட நிழற்பிரதி.
- முதியோர் அடையாள அட்டை.
- ஸ்டேட் விடுப்புச் சான்றிதழ்.
- செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இருப்பின் அதன் தரவுப்பக்கம் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்பிரதி.
- வாகண அனுமதிப்பத்திரம்.
- ஓய்வுபெற்றவராயின் ஓய்வூதிய திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட அடையாள பத்திரம்.
ஆகிய ஆவணங்கள் பிரதேச செயலாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்பிரதியுடன் பெயர், பிறந்த திகதி சரியான முறையில் குறிப்பிடப்பட்ட சத்தியப்பிரமானம் சமர்பிக்கப்படல் வேண்டும்.
தரவுகளற்ற ஆவணங்களுடன் ( பதிவுப்புத்தகம் தேடுதல் விளைவு ) பின்வரும் தகவல்கள் உள்ளடங்கிய சத்தியப்பிரமானம் சமர்பிக்கப்படல் வேண்டும்.
- பெயர்
- பிறந்த திகதி
- பிறந்த இடம்
- முகவரி
- தான் இலங்கை குடியுரிமை என
- கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு.
தரவுகளற்ற ஆவணங்கள் ( பதிவுப்புத்தகம் தேடுதல் விளைவு )
விண்ணப்பதாரியினால் வேண்டப்படும் பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம் என்பனவற்றிற்கு ஏற்ப பிறந்த இடத்திற்குறிய பிரதேச செயலாளர் காரியாலயத்தின் மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவினால் பெற்றுக்கொள்ளலாம்.
- II. திருமணமாகாத மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்த எழுத்து மூலமான ஆவணங்கள் இல்லையாயின்....
- நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் குறித்த விண்ணப்பதாரியின் வயதை உறுதிப்படுத்திய சானறிதழ்.
- பெயரை உறுதிப்படுத்துவதற்கான சத்தியப்பிரமானம்.
- எழுத்து மூலமான ஆவணங்கள் இல்லை என கிராம உத்தியோகத்தரினால் பரிந்துரை செய்யப்பட்ட பிரதேச செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட கடிதம்.
ஒரு நாள் சேவைக்காக......
- ஒரு நாள் சேவைக்காக பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அவசியமாகும்.
- விண்ணப்பதாரி மூலமே ஒரு நாள் சேவைக்கான அறிக்கைகளை கையொப்பமிடுவதோடு பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு விண்ணப்பதாரி கட்டாயமாக சமூகமளித்தல் வேண்டும்.
- ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்ப பத்திரங்களுக்கு குறித்த விண்ணப்பதாரி சமூகமளித்தல் கட்டாயமாகும்.
- ஒரு நாள் சேவைக்காக 1000ரூபாய் திணைக்களத்திற்கு செலுத்தப்படல் வேண்டும்.
வீட்டில் ஏற்பட்ட பிறப்பை பதிவு செய்தல்
வீட்டில் இடம்பெற்ற பிறப்பை பதிவு செய்தல்
- பிறந்த 7 நாட்களினுள் கிராம உத்தியோகத்தரிடம் அறிவித்தல்.
- கிராம உத்தியோகத்தரினால் பிறப்பு தொடர்பாக அறிக்கை ஒன்று பிரதேச பதிவாளருக்கு அனுப்பப்படும்.
- பிறப்பு பதிவு செய்யப்படுவது பிறப்பு நடைப்பெற்ற பிரதேசத்தின் பிறப்பு மற்றும் மரண பதிவாளரின் மூலம்
- சரியாக பூர்ணப்படுத்தப்பட்ட அறிக்கையானது பிரதேச பிறப்பு மற்றும் மரண பதிவாளரிடம் வழங்கப்படல் வேண்டும்.
- அறிக்கையை பதிவாளரினால் பெற்றுக்கொள்ளலாம்.
- அறிவிப்பதற்கு பொருத்தமான நபர்கள்
- தாய்
- தந்தை
- பிறப்பின் போது அருகில் இருந்த நபர்
- பாதுகாவலர்
- பிறந்து 3 மாதங்களிற்குள் பிறந்த பிரிவின் பதிவாளர் மூலம் பதிவு செய்துகொள்ள முடியும்.
- பிறந்து 3 மாதங்களிற்கு பின் பிறப்பை பதிவு செய்வதற்கு சந்தர்பம் ஏற்படின் அது தொடர்பான தாமதித்த பிறப்பை பதிவதற்கான விடயங்களைப் பெறல்.
தனியார் வைத்திய சாலையில் இடம்பெற்ற பிறப்பை பதிவு செய்தல்
தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற பிறப்பை பதிவுசெய்தல்
- பிறப்பு பதிவுசெய்வது பிறப்பு இடம்பெற்ற பிரதேசத்தின் பிறப்பு மற்றும் மரண பதிவாளரின் மூலமாகும்.
- பிறப்பு இடம்பெற்றது தனியார் வைத்தியசாலையில் என்றால்உரிய பிரதேசத்தின் பிறப்பு மற்றும் மரண பதிவாளருக்கு பிறப்பை பதிவுசெய்வதற்கு அறிவித்தல் வேண்டும்.
- பிறப்பை பதிவு செய்வதனை அறிவிப்பதற்கு பொருத்தமான நபர்கள்.
- தந்தை
- தாய்
- குழந்தை பிறக்கும் போது உரிய இடத்தில் இருந்த நபர்
- குழந்தைக்கு பொறுப்பாக இருக்கும் நபர்
- வைத்தியசாலையின் வைத்தியர்
- பிறப்பு மற்றும் மரண பதிவாளரினால் பெறப்பட்ட, பிறப்பை அறிவிப்பதற்கு தேவையான அறிக்கைகள்.
முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
- I. ஒழுங்கு முறையாக பூரணப்படுத்தப்பட்ட அறிக்கைகள்.
- II. பிறப்பை உறுதிசெய்ய வைத்தியரினால் வெளியிடப்படும் அறிக்கை
கிராமிய வைத்திய சாலையில் இடம்பெற்ற பிறப்பை பதிவு செய்தல்
கிராம வைத்தியசாலையில் இடம்பெற்ற பிறப்பை பதிவு செய்தல்
- பிறப்பை பதிவு செய்வது பிறப்பு இடம்பெற்ற பிரதேசத்தின் பிறப்பு மற்றும் மரண பதிவாளரின் மூலமாகும்.
- பிறப்பு இடம்பெற்றது கிராம வைத்தியசாலையில் என்றால் உரிய பிரதேசத்தின் பிறப்பு மற்றும் மரண பதிவாளருக்கு பிறப்பை பதிவு செய்வதற்கு அறிவித்தல் வேண்டும்.
- பிறப்பை பதிவு செய்வதனை அறிவிப்பதற்கு பொருத்தமான நபர்கள்.
- தந்தை
- தாய்
- குழந்தை பிறக்கும் போது உரிய இடத்தில் இருந்த நபர்
- குழந்தைக்கு பொறுப்பாக இருக்கும் நபர்
- வைத்தியசாலையின் வைத்தியர்
- பிறப்பு மற்றும் மரண பதிவாளரினால் பெறப்பட்ட, பிறப்பை அறிவிப்பதற்கு தேவையான அறிக்கைகள்.( 16 வது கட்டுரை அறிக்கை பத்திரம்)
முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்
- ஒழுங்கு முறையாக பூரணப்படுத்தப்பட்ட அறிக்கைகள்.
- பிறப்பை உறுதிசெய்ய வைத்தியரினால் வெளியிடப்படும் அறிக்கை
- அறிவிப்பாளருக்கு இலவசமாக பிறப்பிச் சான்றிதழ் வழங்கப்படும்.
பொது வைத்திய சாலையில் இடம்பெற்ற பிறப்பை பதிவு செய்தல்
வைத்தியசாலையில் இடம்பெறும் பிறப்பொன்றை பதிவுசெய்தல்.
- பிறப்பை பதிவுசெய்து கொள்வதற்கு பிறந்த வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அறிவித்தல்.
- பிறப்பை பதிவு செய்து கொள்ளும்போது அறிவிக்க தகுதியான நபர்கள்.
- தந்தை
- அம்மா
- குழந்தை பிறந்திருக்கும் நேரத்தில் குறித்த இடத்தில் உள்ள நபர்
- குழந்தைக்கு பொறுப்பானவர்/ பாதுகாவலர்
- வைத்தியசாலையின் வைத்தியர்
- பிறப்பை தெரியப்படுத்துவதற்கு தேவையான ஆவணம், வைத்திய பதிவாளரின் மூலம் பெற்றுக் கொள்ளல்( முன்வைக்க்கப்படவேண்டிய ஆவணங்கள்)
- ஒழுங்காக பூரணப்படுத்திய ஆவணங்கள்.
- குழந்தை பிறந்த்து என உறுதிப்படுத்த வைத்திய சாலையினால் வழங்கும் அறிக்கை.
பிறப்புச் சான்றிதழின் பிரதியை பெற்றுக் கொள்ளல்
பிறப்புச் சான்றிதழின் பிரதியை பெற்றுக் கொள்ளல்.
- 1969- 2014 வரையிலான பிறப்புச் சான்றிதழ்களை இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
- தேவையான விண்ணப்பத்தை எந்தவொரு பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளர் பிரிவின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
அறவிடும் கட்டணம்
- பிறப்புச் சான்றிதழின் இலக்கம் பதிவு செய்த திகதி என்பன தெரிந்தவிடத்து ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ. 100.00
- பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்த திகதி என்பன தெரியாவிடின் இரண்டு வருட காலங்களுக்கு உட்பட தேடுதலை மேற்கொண்டு குறித்து ஆவணத்தை தேட வேண்டுமாயின் ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.200.00
- தேவையான பணத்தை பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவிற்கு வழங்க வேண்டும்.
- பூரணப்படுத்திய விண்ணப்பத்தை குறித்த பிரதேச செயலகத்திற்கு ஒப்படைத்தல்
- பிறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெற்றிக்கொள்வதாயின் முகவரியை குறிப்பிட்டு மூத்திரை ஒட்டிய கடித உரையை விண்ணப்பத்துடன் ஒப்படைத்தல்.
- பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது எனில் பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படுவதுடன் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை எனில் அது தொடர்பாக கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
- ஒரு பிரதியால் தேவைக்கேற்ப இன்னும் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.( சுற்றறிக்கை இல- 2/2012)
பிறப்புச் சான்றிதழில் உள்ளடங்கிய விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளல்
பிறப்புச் சான்றிதழில் உள்ளடங்கிய விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது..
- பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் குறிப்புக்கள்
- முதலாவது பந்தியின் தகவல் ( பிறந்த திகதி, பிறந்த இடம்)
- மூன்றாவது பந்தியின் தகவல் (ஆண் பால், பெண்பால்) பிறப்புப் பதிவின் பின்
- ஐந்தாவது பந்தியின் தகவல் தாயின் பெயரில் மாற்றம் செய்து இருப்பின் பெயர் திருத்தத்தை இந்த சட்ட திட்டங்களுக்கு அமைவாக மாற்றம் செய்ய முடியாது.
- ஒன்பதாவது பந்தியின் தகவல் ( அறிவிப்பவரின் தகவல் ) திருத்தம் செய்ய முடியும்.
- ஆவணங்களை பிறந்த இடத்தில் உள்ள பிரதேச செயலகத்தின் பிரதி மாவட்ட பதிவாளருக்கு வழங்கள்.
- ஆவணங்களை வழங்கவேண்டியது
- பிறப்புச் சான்றிதழின் உரிமையாளர்
- தந்தை / தாய்
- சட்ட பூர்வமான பாதுகாவளர்
- பிறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களில் எவ்வித அதிதிருப்தியும் வெளிப்படுத்தாத ஒருவர்
- ஆவணத்திற்கு வழங்க வேண்டிய கட்டணம் 50 ரூபாய்
- ஆவணத்திற்கு திருத்தங்கள் மேற்கொள்ள எத்தணிக்கும் பிறப்புச் சான்றிதழின் பிரதியை கண்டிப்பாக சேர்த்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது போலி இல்லாதவை என்பதனை அறிந்துகொள்வதற்காக எழுதப்பட்டுள்ள சான்றுகள் பல கீழே குறிப்பிடப்பட்டுள்ளது
- தாய் தந்தையின் திருமணச்சான்றிதழ்
- பிள்ளைகளின் பெயர்கள் , உடன் பிறப்பின் பெயர்கள்
- தாய் தந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- தாய் தந்தையின் திருமண பதிவின் பின்னர் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- ஆரோக்கிய சாலை, மாத்ரூ நிவச என்பவற்றில் உள்ள குறிப்புக்களின் சான்றிதழ்களின் பிரதி மற்றும் மருத்துவஷ்ஷி அறிக்கையின் பிரதி
- மாணவர் இடைவிலகல் சான்றிதழ், மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது வழங்கப்படும் ஆவணத்தின் பிரதி
- பிள்ளை மற்றும் பெற்றோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் பெயர் பட்டியலின் பிரதி
- தந்தை இறந்திருப்பின் அவரின் மரணச் சான்றிதழ்
தாமதமாகிய பிறப்பை பதிவு செய்தல்
தாமதமாகிய பிறப்பு பதிவு செய்தல்
- பிறப்பு நடந்து மூன்று மாத காலத்திற்குள் பதிவுசெய்யாவிடின் அவ்வாறான பிறப்புப் பதிவை மேற்கொள்ள முடியும்.
- தேவையான ஆவணங்ளை பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
- ஆவணத்தை முன்வைக்கக் கூடியவர்கள்
- அதற்காக முயற்சிக்கும் ஒருவர்
- பெற்றோர்களில் ஒருவர்
4.ஆவணத்துக்கு தேவையான செலவை பணத்தால் செலுத்த வேண்டும்.
- ஆவணத்திற்கான கட்டணம் ரூபா 50.00
5 பிறப்பு நடந்து ஒரு வருட காலத்திற்குல் முன்வைக்கும் ஆவணத்துடன் பின்வரும் ஆவணங்களை முன்வைத்தல்.
- பெற்றோர் திருமணமானவர்களாயின் அவர்களின் திருமணச் சான்றிதழ்
- குழந்தையின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவனணங்களில் ஒன்று
- வைத்திய பிறப்பு அறிக்கை அல்லது சான்றிதழின் பிரதி.
- கிராம உத்தயோகத்தரின் பிறப்பு அறிக்கை அல்லது சான்றிதழின் பிரதி.
- தோட்டத்தில் பிறந்த்தற்கான அறிக்கை அல்லது சான்றிதழின் பிரதி.
- குடும்ப நல சேவை உத்தயோகத்தரின் சான்றிதழ்.
6 பிறப்பு நடந்து ஒரு வருட காலம் தாமதமாகியதன் பின்’ முன்வைக்கும் ஆவணத்துடன் பின்வரும் ஆவணங்களை முன்வைத்தல் வேண்டும்.
- பெற்றோர் திருமணமானவர்களாயின் அவர்களின் திருமணச் சான்றிதழ்.
- பிறப்பை பதியவில்லை என்பதற்கான சான்றிதழ்.
- குறித்த நபரின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவனணங்களில் ஒன்று
- வைத்திய பிறப்பு அறிக்கை அல்லது சான்றிதழின் பிரதி.
- கிராம உத்தயோகத்தரின் பிறப்பு அறிக்கை அல்லது சான்றிதழின் பிரதி.
- தோட்டத்தில் பிறந்த்தற்கான அறிக்கை அல்லது சான்றிதழின் பிரதி.
- மருத்துவச்சியின் பிறப்பு அறிக்கையின் பிரதி
மேற்கூறிய ஆவணங்கள் இல்லாவிடின் பின்வரும் ஆவணங்களில் ஏதாவது ஒன்று
- சுகாதர அபிவிருத்தி குறிப்பு
- திருமுழுக்கு சான்றிதழ்
- பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிக்கும் பதிவுச் சான்றிதழின் பிரதி / மாணவர் இடை விலகல் சான்றிதழ்
- பெருந்தோட்ட நலன்புரி உத்தயோகத்தரின் அறிக்கை
- பிறந்த திகதிக்கு அண்மையில் சரிசெய்யப்படும் ஜாதகம் அல்லது நேரம் பார்க்கும் சீட்டு.
* If you want to application please refer Downlords
















